தமிழில் எழுதப் படிக்க தெரியுமா? ஆதிதிராவிடர் நலத் துறை விடுதிகளில் வேலை

 

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் 17 சமையலர் காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள அரியலூர் மாவட்டத்தில் குடியிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

சமையலர் - 17 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு : 

18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

முன்னுரிமை : 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தேர்வு முறை : 

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/12/2020122319.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.01.2021

From around the web