8ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டல அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பட்டியல் எழுத்தர் - 82 காலிப்பணியிடங்கள்
உதவுபவர் - 19 காலிப்பணியிடங்கள்
காவலர் - 89 காலிப்பணியிடங்கள்

TNCSC Recruitment 2021

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ.2,359 முதல் 2,410/- மற்றும் அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

கல்வித் தகுதி :

பி.எஸ்.சி, +2 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 

01.07.2020 அன்றைய தேதி படி குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக OC - 30, BC/BCM/MBC - 32, SC/SCA/ST - 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : 

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2021 மாலை 5.00 மணி வரை

From around the web