ரூ. 1.19 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உதவிப்பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, தட்டச்சர் ஆகிய பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : உதவி பொறியாளர் – 78 காலிப்பணியிடங்கள் சுற்றுச்சூழல் விஞ்ஞானி – 70 காலிப்பணியிடங்கள் உதவியாளர் (இளநிலை உதவியாளர்) – 38 காலிப்பணியிடங்கள் தட்டச்சர் – 56 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி : உதவி பொறியாளர் – சிவில், கெமிக்கல்,
 
TNPCB Recruitment 2020

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உதவிப்பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, தட்டச்சர் ஆகிய பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ. 1.19 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு  வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

உதவி பொறியாளர் – 78 காலிப்பணியிடங்கள்
சுற்றுச்சூழல் விஞ்ஞானி – 70 காலிப்பணியிடங்கள்
உதவியாளர் (இளநிலை உதவியாளர்) – 38 காலிப்பணியிடங்கள்
தட்டச்சர் – 56 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

உதவி பொறியாளர் – சிவில், கெமிக்கல், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் எதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருப்பதோடு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் விஞ்ஞானி – ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் (இளநிலை உதவியாளர்) – ஏதேனும் ஒர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் 6 மாத காலம் டிப்ளமோ சர்டிபிக்கேட் முடித்திருக்க வேண்டும்.
தட்டச்சர் – ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி மற்றும் அரசு தட்டச்சு தொழில்நுட்ப தேர்வில் தமிழ், ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் 6 மாத காலம் டிப்ளமோ சர்டிபிக்கேட் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

12.02.2020 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வு உண்டு.

சம்பளம் :

ரூ. 19,500 முதல் 1,19,500/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), இதர வகுப்பினருக்கான தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகும். ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அ), மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு ரூ.250 தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnpcb.gov.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.03.2020

From around the web