10 ஆம் வகுப்பு தேர்ச்சியா? இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்களாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள்(ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட), ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், சமூகப் பணி பயிலும் மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள், அரசியல் சார்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மகளிர் குழுக்கள், மைத்ரி சங்கங்கள் மற்றும் உள்ளடங்கிய சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள், மாவட்ட/வட்ட சட்டப்பணிகள் தன்னார்வ சட்டப்பணியாளர்கள் ஆகியோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதோடு விரிவாகப் புரிந்துணரும் திறன் உடையவராகவும் இருக்க வேண்டும்.
வயது :
18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
பணிகாலம் :
தேர்வு செய்யப்படும் நாளிலிருந்து ஓர் ஆண்டு
தேர்வு முறை :
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://districts.ecourts.gov.in/sites/default/files/PLV%202021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.03.2021