சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: 1000 பேர்களுக்கு மேல் வேலை கிடைக்க வாய்ப்பு

சென்னையில் ஜனவரி 10-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த முகாம் மூலம் சுமார் 1000 பேர்களுக்கும் மேல் வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வேலை தேடுபவர்கள் உடனடியாக இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து ஜனவரி 10-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தவுள்ளன. சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10
 
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: 1000 பேர்களுக்கு மேல் வேலை கிடைக்க வாய்ப்பு

சென்னையில் ஜனவரி 10-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த முகாம் மூலம் சுமார் 1000 பேர்களுக்கும் மேல் வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வேலை தேடுபவர்கள் உடனடியாக இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து ஜனவரி 10-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தவுள்ளன. சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பல தனியார் துறை வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமா, பட்டதாரிகள் ஆகிய கல்வித்தகுதியை உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

அதேபோல் இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், பணியாளர்கள் / ஆட்கள் தேவைப்படும் நேர்வில் தங்கள் நிறுவனத்தின் முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

From around the web