துணை இராணுவப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

துணை இராணுப்படையில் ஒன்றான இந்திய திபெத் எல்லைக் காவல்படையில் காலியாக உள்ள காவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Constable (GD) பிரிவில் 121 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: Constable (GD) பணியிடங்களுக்கு ரூ.21,700 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 23 வயதிற்குள் இருக்க வேண்டும். விளையாட்டு தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றிருக்க
 
துணை ராணுவப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

துணை இராணுப்படையில் ஒன்றான இந்திய திபெத் எல்லைக் காவல்படையில் காலியாக உள்ள காவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துணை இராணுவப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

காலிப் பணியிடங்கள்:

Constable (GD) பிரிவில் 121 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

Constable (GD) பணியிடங்களுக்கு ரூ.21,700 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி:

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மருத்துவ பரிசோதனையில் முதல் முறை தேர்ச்சி பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 15 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.100 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக்கும் முறை:

ஆன்லைனில் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய

https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/4/26/ITBP-Recruitment-2019-121-Constable-GD-Posts.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.06.2019

From around the web