நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உள்ளிட்ட 57 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள்: கணினி இயக்குபவர் பணிக்கு 4 பணியிடங்களும், இரவு நேர காப்பாளர் பணிக்கு 10 பணியிடங்களும், ஜெராக்ஸ் மெஷின் இயக்குபவர் பணிக்கு 7 பணியிடங்களும், டிரைவர் பணிக்கு 1 பணியிடமும், சமையல்காரர் பணிக்கு 6 பணியிடங்களும், துப்புரவு பணியாளர் பணிக்கு 4 பணியிடங்களும், சுகாதார பணியாளர் பணிக்கு 3 பணியிடங்களும், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பணிக்கு 10 பணியிடங்களும்
 
நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உள்ளிட்ட 57 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை

காலிப்பணியிடங்கள்:

கணினி இயக்குபவர் பணிக்கு 4  பணியிடங்களும், இரவு நேர காப்பாளர் பணிக்கு 10 பணியிடங்களும், ஜெராக்ஸ் மெஷின் இயக்குபவர் பணிக்கு 7 பணியிடங்களும், டிரைவர்  பணிக்கு 1 பணியிடமும், சமையல்காரர் பணிக்கு 6  பணியிடங்களும், துப்புரவு பணியாளர்  பணிக்கு  4  பணியிடங்களும், சுகாதார பணியாளர்  பணிக்கு 3  பணியிடங்களும்,  இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்  பணிக்கு 10  பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

கணினி இயக்குபவர்   பணியிடத்திற்கு கம்ப்யூட்டர் துறையில் பட்டப்படிப்பு  படித்து இருக்க வேண்டும். இரவு நேர காப்பாளர் பணியிடத்திற்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் .

ஜெராக்ஸ் மெஷின் இயக்குபவர்   பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமையலர் பணியிடத்திற்கு  தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  துப்புரவு பணியாளர்  பணியிடத்திற்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சுகாதாரபணியாளர்  பணியிடத்திற்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்:

கணினி இயக்குபவர்   பணியிடத்திற்கு ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரை   வழங்கப்படும். இரவு நேர காப்பாளர் பணியிடத்திற்கு  ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை   வழங்கப்படும்.  

ஜெராக்ஸ் மெஷின் இயக்குபவர் பணியிடத்திற்கு ரூ. 160,600 முதல் ரூ. 52,400வரை  வழங்கப்படும்.   டிரைவர் பணியிடத்திற்கு ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை  வழங்கப்படும்.   சமையலர் பணியிடத்திற்கு   ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை  வழங்கப்படும். துப்புரவு பணியாளர்  பணியிடத்திற்கு   ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும்.

சுகாதாரப் பணியாளர்  பணியிடத்திற்கு ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும்.  இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பணியிடத்திற்கு ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

அனைத்து பணியிடத்திற்கும்  18 வயது  முதல் 35 வயதிற்குள்  இருக்க வேண்டும்.  

தேர்வு  செய்யப்படும்  முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரம்:

http://www.districts.ecourts.gov.in/tn/namakkal  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

 நாமக்கல் – 637003

மேலும் பணிகளை பற்றிய முழுமையான விவரங்களை அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment_Civil%20-%20Notification%20-%20Tamil_01-04-2019.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

29.04.2019 அன்று மாலை 6.00 மணிக்குள்ளாக கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

From around the web