எதிர்மறை எண்ணங்கள் நம்மை தாக்காமல் இருக்கனுமா?!

0bf67a07c7ad17e2247766c8294339a7-1

நாம் நல்ல நிலையில் இருப்பதை காண சகியாதவர்கள், நமக்கு கெட்டது நடக்க வேண்டும் என நினைக்கும் எதிரிகள், நமக்கு துன்பம் கொடுக்கும் நோக்கில் நம்மை நெருங்குபவர்களிடமிருந்து நம்மை காக்க ஸ்ரீலட்சுமி வராகரை வழிபடுவது நல்லது. பூமாதேவியை ஒருமுறை அசுரன் ஒருவன் கவர்ந்து பாதாளலோகம் செல்ல, அவனிடமிருந்து  பூமியை மீட்டுவர,  விஷ்ணுபகவான் வராக(பன்றி) உருக்கொண்டு பாதாள உலகம் சென்று அசுரனிடமிருந்து போரிட்டு, பூமியை மீட்டு வந்தார்.  இது தசாவதரத்தின் மூன்றாவது அவதாரமாகும்.

6666a5d6c0d62130ef46b8074946b45f-1

ஓம் தநுர்த்தராய வித்மஹே  
வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி  
தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்

நாராயணனின் வழிபாட்டிற்குரிய மாத வளர்பிறை ஏகாதசி, சனிக்கிழமைகள் போன்ற தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு அங்கு தியான நிலையில் அமர்ந்து இந்த மந்திரத்தினை மனதிற்குள்ளேயே 108 முறை சொல்லி வராகரை வணங்கி வர துஷ்டர்களை தூர நிறுத்தும்.. எதிர்மறை எண்ணங்கள் நம்மை தாக்காது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.