Connect with us

ஸ்டாலினை ‘வாடா, போடா’ என்று சர்ச்சையில் சிக்கிய எடப்பாடி பழனிச்சாமி

EPS stalin 1024x683 1

தமிழகம்

ஸ்டாலினை ‘வாடா, போடா’ என்று சர்ச்சையில் சிக்கிய எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக முதல்வரை பற்றி பேசும்பொழுது திட்டங்களை எப்படி செய்து விடுவான் பார்ப்போம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது….

எடப்பாடி சரபங்காற்றில் மூன்று நாட்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோரை நகராட்சி தொடக்கப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டது, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு எடப்பாடிக்கு வருகை தந்தார்.

அப்போது அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்ததை அடுத்து நகராட்சி தொடக்கப்பள்ளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி,உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உண்மை தர்மம் வென்றுள்ளது என்றும் கொரோனா பேரிடர் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றனர் இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.

திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற 16ஆம் தேதி தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவி வருவதாகவும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கும் என்றும் தெரிவித்தார்…

அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதன் மூலம் உண்மை தர்மம் நீதி வென்றுள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்,ஏற்கனவே தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத முதலமைச்சர் தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் 10 பிரச்சனைகளை வழங்கிடுமாறு கேட்டுள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி தனது தொகுதி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10 பிரச்சனைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த போது திட்டங்களை எப்படி நிறைவேற்றப்படுவான் என்று தமிழக முதல்வரை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான எந்தவித அறிவிப்புகளையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது என்றார்

தொடர்ந்து கா.புதூர் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களில் இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top