Connect with us

‘புரட்சி தலைவர்’, ‘புரட்சி தலைவி’ வரிசையில்… பொதுக்குழுவில் எடப்பாடிக்கு சூட்டப்பட்ட பட்டப்பெயர் என்ன தெரியுமா?

admk 1

செய்திகள்

‘புரட்சி தலைவர்’, ‘புரட்சி தலைவி’ வரிசையில்… பொதுக்குழுவில் எடப்பாடிக்கு சூட்டப்பட்ட பட்டப்பெயர் என்ன தெரியுமா?

அதிமுக பொதுக்குழுவில் பேசிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ‘எழுச்சித் தலைவர்’ என பட்டப்பெயர் சூட்டியுள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 9.15 மணி அளவில் இருந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்களிடையே உரையாற்றி வருகின்றனர். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உரையாற்றுகையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு சாதாரண தொண்டன் ஒருவர் வந்திருக்கிறார்

என் இதயத்தில் சுடர்விட்டு எரியும் இதய தெய்வம் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் அல்ல எடப்பாடி பழனிசாமிகட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எளிய தொண்டன் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பது இறைவனின் கூத்து என்றும்,புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி போல் இன்று முதல் எடப்பாடி பழனிசாமி, ‘எழுச்சித் தலைவர்’ என்று அழைக்கப்படுவார் என்றும் அவருக்கு பொதுக்குழுவில் பட்டப்பெயர் சூட்டினார். இதனை ஆதரிக்கும் விதமாக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top