முக்கிய அறிவிப்பு: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு..!!

இன்றைய தினம் காலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றி தகவல்கள் கசிந்து கொண்டு வந்தன. முதலில் ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறியது.

இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வு செய்து தற்போது செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி அளித்து கொண்டு வருகின்றனர்.

அதன்படி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகிறார் என்று நத்தம் விசுவநாதன் அறிவித்துள்ளார். சென்னை வானரகத்தில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு திட்டப்படி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யும் தீர்மானமும் அன்றைய தினம் நடைபெறப்பட உள்ளது என்று கூறினார். கடந்த பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற உள்ள பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.

பொதுக்குழு குறித்து ஓபிஎஸ் தரப்பில் உள்ள வைத்தியலிங்கம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் குற்றசாட்டினை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment