Connect with us

விஷயம் தெரியாமல் அறிக்கை; எடப்பாடி பழனிசாமி பொய் பரப்புரை!-அமைச்சர் கண்டனம்;

palaniswai

தமிழகம்

விஷயம் தெரியாமல் அறிக்கை; எடப்பாடி பழனிசாமி பொய் பரப்புரை!-அமைச்சர் கண்டனம்;

ஆளுங்கட்சி  மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து விமர்சனம் செய்வது எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் வேலையாக காணப்படுகிறது. ஆயினும் ஒரு சில நேரங்களில் எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியினை விமர்சனம் செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.

அதற்கு ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் தக்க பதிலடி அளிப்பார்கள். அந்த வகையில் ஆளு கட்சியின் அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் பொய் பரப்பரை செய்கிறார் என்று கூறியுள்ளார்.

அதன்படி தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி பொய் பரப்பரை மேற்கொள்கிறார் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனமும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு வரும் முதலீடுகள், இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலை வாய்ப்புகளை கெடுக்க வேண்டாம் என்றும் கூறினார். வேதாந்தா, பாக்ஸ் கான் முதலீடு மகாராஷ்டிராவுக்கு சென்று விட்டதாக அறியாமையில் அறிக்கை விடுகிறார் என்றும் கூறினார்.

தமிழகத்தில் செமி காண்ட்ராக்டர் திட்டங்களை தனியாக செயல்படுத்திட பாக்ஸ் கான் பரிசிளித்து வருவதாகவும் கூறினார். செமி காண்ட்ராக்டர் திட்டம் தொடர்பாக பாக்ஸ் காணுடன் தமிழக அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். முன்பு போல் இல்லாமல் மாநிலம் முழுவதும் பரவலாகவும் சீராகவும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top