‘மோடிக்கு அது இருக்கு; ஸ்டாலினுக்கு அது இல்ல’… ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய எடப்பாடி!

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக கடந்த வாரம் 4 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்தித்த முதல்வர், நீட் தேர்வு விலக்கு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் டெல்லிக்கு தமிழக உரிமைகளை கேட்டு பெறுவதற்காகவே வந்ததாகவும், அதிமுகவைப் போல் மத்திய அரசுக்கு காவடி தூக்க வரவில்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் கோடை கால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடையே ஆற்றிய உரையில், நான் முதல்வராக இருந்தபோது டெல்லி பயணத்தை டெல்லிக்கு காவடி தூக்குவதாக பேசினார். இப்போது திமுக தலைவர் என்ன காவடி தூக்கி சென்றார். மத்திய அரசுடன் அதிமுக இனக்கமாக இருந்ததால் ஏராளமான நிதி பெற்று தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் தந்தோம். தமிழகத்தில் உள்ள மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அமைச்சர்கள் மிகப்பெரிய வரவேற்பு தந்ததாக தங்கம் தென்னரசு கூறினார். மத்திய அரசில் உள்ளவர்கள் அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள். ஆனால் பிரதமர் தமிழகம் வந்தபோது கோபேக் மோடி என்று பலூண் பறக்கவிட்டார். அரசியல் நாகரீகம் தெரியாதவர் ஸ்டாலின் என கடுமையாக விமர்சித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment