News
பிரதமரிடம் பேசியது என்ன? விளக்கம் அளிக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக. அதன் பின்னர் தற்போது தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த கட்சியானது தற்போது தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்கட்சியாக காணப்படுவதும் உண்மைதான் மேலும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் முந்தைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து செய்தியாளர்களை சந்திப்பார். அதன்படி தற்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியது குறித்து விளக்கம் அளிக்கிறார்.
அந்தப்படி சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம் என்று அவர் கூறியுள்ளார் பிரதமர் மோடியை ஓபிஎஸ் உடன் சென்று சந்தித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி பேட்டியளித்தார். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் பிரதமரிடம் கூறினோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நீர் பற்றாக்குறையை போக்க காவேரி கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டு நன்றி என கூறி விடைபெற்றார் எடப்பாடி பழனிசாமி.
