Connect with us

எடப்பாடி பழனிசாமி மற்றும் துரைமுருகன் செய்த நெகிழ வைத்த சம்பவம்!

News

எடப்பாடி பழனிசாமி மற்றும் துரைமுருகன் செய்த நெகிழ வைத்த சம்பவம்!

5690a5fc9b0a56d253e15049b4c3c1e8

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ளது திமுக. மேலும் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டது. அதில் திமுக கட்சி  பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் முதல்வரின் மகனான திரு மு க ஸ்டாலின் தற்போது முதல்வராக உள்ளார். மேலும் அவர் முதன்முறையாக தமிழகத்தில் முதல்வராக  உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.c5b7d6c52d0a4f702672e76cbef79472

 தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வந்துள்ளது முன்னாள் ஆளும் கட்சியான அதிமுக. மேலும் தமிழகத்தில் இவ்விரு கட்சிகளின் கூட்டணியில் மட்டுமே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக ஆனது  மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக தற்போது உள்ளது. மேலும் அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தலைவராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் அவை முன்னவராக திமுகவை சேர்ந்த அமைச்சர் துரைமுருகன் உள்ளார். இந்நிலையில் அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அப்பாவுவை இருக்கையில் அமரச் செய்தனர். பேரவைத்தலைவர் அப்பாவுக்கு அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பேரவை தலைவர் அப்பாவு பாகுபாடின்றி நடுநிலையாக செயல்படுவார் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top