இணையதளத்தை சுற்றி அடிக்கும் வைகைப்புயல்! இன்று “எடக்கு மொடக்கு” பாடல் வெளியீடு!

எந்த ஒரு நடிகரும் தன்னை சற்று உயர்வாகவே மற்றவர்கள் என்ன வேண்டும் என்று காணப்படுவர். ஆனால் தமிழ் சினிமாவில் தன்னை தாழ்த்திக் கொண்டு நடித்து இன்று உலக சினிமா அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை குறித்து வைத்துள்ளார் நடிகர் வடிவேலு.

Vadivelu

இவர் படம் சில நாட்களாக வெளியே வராவிட்டாலும் இணையதளத்தில் இவர்தான் மீம்ஸ்களின் கதாநாயகனாக காணப்படுகிறார். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்பு தனது நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் உருவாகியுள்ளது.

அதற்கான மோஷன் போஸ்டர் நேற்றையதினம் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்தநிலையில் வடிவேலு நடிப்பில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் தோற்றம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது,

இந்த திரைப்படத்தினை சுராஜ் இயக்குகிறார், நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், இன்று மாலை நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் “எடக்கு மொடக்கு” என்ற முதல் பாடல் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment