
News
பொருளாதார நெருக்கடி! 2-ம் கட்டமாக இலங்கைக்கு நிவாரணம்;;
தமிழ்நாட்டில் இருந்து இரண்டாம் கட்டமாக இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி வாஉசி துறைமுகத்தில் இருந்து கப்பலில் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தென்காசி, நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 60 டன் மருந்து உட்பட மொத்தம் 15,110 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செஞ்சு மஷ்தான், கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மேலும், தமிழக அரசு முதற்கட்டமாக 45 கோடி மதிப்பிலான 9 ஆயிரம் டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 24 ஆயிரம் டன் மருந்து பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
