21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி சோதனை!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 இடங்களில்  இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனங்களில் சோதனை நடைப்பெற்று வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் எனப்படும் நிறுவனங்களில் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வேலூரில் செயல்பட்டுவரும் இந்நிறுவனத்தின் மீது கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் எட்டாயிரம் தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பெற்று தமிழகம் முழுவதும் முதலீடை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் ஐ.எப்.எஸ். எனப்படும் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரக்கோணத்தில் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இத்தகைய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment