
செய்திகள்
பொருளாதர நெருக்கடி: அதிபர் விடுத்த முக்கிய உத்தரவு !!!
இலங்கையில் கடும் பொருளாதர நெருக்கடி நிலவி வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசலுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அந்நாட்டு அதிபராக விக்ரமசிங்கே பதவியேற்றதில் இருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் எரிபொருட்களை பதுக்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே எரிபொருள் நெருக்கடி மற்றும் அது தொடர்பாக இனி வரும் காலங்களில் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டமானது நடைப்பெற்று. இதில் கல்வி அமைச்சர், போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் போன்றவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அதிபர் மீன்பிடி, சுற்றுலா, விவசாயம் மற்றும் போக்குவரத்து போன்ற இடங்களில் எரிபொருட்கள் வினியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். வரிசைகளில் இருந்து எரிபொருட்களை கொள்முதல் செய்து அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதற்கான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே காவல்துறையினருக்கு உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
