வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தலைநகர் சென்னை மழை நீருக்குள் மூழ்கி இருந்தது. இதனால் சென்னையில் உள்ள பெருவாரியான வீடுகள், சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தது.
எனவே போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்பட்டது. அதன் பின்னர் மெல்ல மெல்ல மழையின் தாக்கம் குறைந்த போது தேங்கிய மழைநீர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. இவ்வாறு உள்ள நிலையில் சென்னையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காரணம் என்னவெனில் எதிர்பாராத விதமாக இன்று மதியம் முதல் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம், நூறடி சாலை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சேத்துப்பட்டு மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் மீண்டும் சாலை போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கின்றனர்.