
News
நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி; 20 சுரங்கங்கள் மீண்டும் திறப்பு !!
இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுவதால் மின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், தமிழகம், டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதனிடையே நிலக்கரி தட்டுப்பாட்டால் மூடப்பட்ட 20 சுரங்கங்கள் மீண்டும் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டன. மத்திய நிலக்கரி அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 20 சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் நிலக்கரி தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் மின் உற்பத்தி சீராக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாகவும் 50 சுரங்கள் தனியார் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கலாம் என்ற தகவலும் வந்துள்ளது.
மேலும், உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் விலையின் அடிப்படையில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
