Connect with us

கொரோனா மூன்றாம் அலையின் எதிரொலி! அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!!

News

கொரோனா மூன்றாம் அலையின் எதிரொலி! அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!!

4b40633522e11d27a187b0a36ce04322

மக்களுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அதனை கொரோனா  என்றே கூறலாம். அந்த படி கொரோனா  நோயானது மனிதர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்தது. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு மிகவும் கடுமையாக அமல்படுத்தப்பட்டன இதன் விளைவாக பொருளாதார பாதிப்பும் அதிகமாக உருவானது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் இந்த கொரோனா வின் மூன்றாம் நிலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவது கண்முன்னே தெரிகிறது. அதுவும் நம் கேரளாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக பரவி வருகிறது,b5821e3bb019c87f42416502729b2ffa

இந்த நிலையில் தமிழகத்திலும் சில கட்டுப்பாடுகள் அழிக்கப்பட்டுள்ளன குறிப்பாக சென்னை திருச்சி கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமின்றி கடைகள் வணிக வளாகங்கள் திறப்பதற்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மத்தியில் தற்போது இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பனியன் கம்பெனிகள் அதிகமாக உள்ள திருப்பூர் நகரில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது

அதன்படி திருப்பூர் நகரத்தில் அத்தியாவசியம் தவிர்த்து பிற கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் உணவகங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் 5 மணி வரை 50% இருக்கைகள் மட்டுமே உபயோகத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது அதன்பின் ஒன்பது   மணி வரை  பார்சல் சேவை அனுமதி அளித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிறு அனைத்து சூப்பர் மார்க்கெட் வணிக வளாகங்கள் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் அத்தியாவசிய மற்ற கடைகள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top