சாப்பிட்ட உணவுக்கு காசுகேட்டதால் விபரீதம்: ஃபாஸ்ட்புட் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு!!

செங்கல்பட்டு அடுத்த திருக்கழுக்குன்றம் அருகே ஃபாஸ்ட்புட் ஓனரை போதை ஆசாமிகள் சரமாறியாக தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் ஃபாஸ்ட்புட் கடை நடத்தி வருபவர் ரமேஷ். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த ஒருவர் வித விதமாக ஆர்டர் செய்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

சூரிய கிரகணம்… திருப்பதி கோவில் நடை 12 மணி நேரம் மூடப்படும்..!!

பின்னர் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. இதனால் ஃபாஸ்ட்புட் ஓனர் பணம் கேட்டப்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் ரமேஷை மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சரமாறியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஹெல்மெட் ஆசாமியை பிடித்தப்போது, அவர் சாப்பிட்ட உணவுக்கு காசுகொடுக்காமல் சென்ற சரத்குமார் என்பது தெரியவந்தது.

வலுவடையும் சிட்ராங் புயல்! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை?

இந்நிலையில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சரத்குமார் மீது கொலை, கொள்ளை வழக்கு இருப்பது அம்பலமானது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment