சாப்பாட்டில் செத்துக்கிடந்த பாம்பு குட்டி; 50 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!!

பாம்பு குட்டி

கலப்படம், தரமற்ற உணவு என்று உணவுப் பொருட்களின் மீது கவனக் குறைவு அதிகரித்துள்ளது. நம் தமிழகத்தில் உள்ள பல உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை புரிந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உணவில் பாம்பு குட்டி இருந்தது பலருக்கும் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதன்படி கர்நாடகாவில் உள்ள அபே தும்கூர் விஸ்வராத்யா வித்யாவர்தக் குடியிருப்பில் பள்ளி ஒன்று உள்ளது.

இந்த பள்ளியில் கடந்த வியாழக்கிழமை அன்று காலை உணவு உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காலை உணவாக ரவையால் சமைத்த உப்பிட்ட கஞ்சியை சாப்பிட கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளனர். பின்னர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு 50 மாணவர்கள் அழைத்துக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை பெற்ற அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது. பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சரிபார்க்கும் போது அந்த உணவில் இறந்து கிடந்த பாம்பு குட்டி ஒன்று இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உணவு சமைத்து ஊழியர்கள் மீது ஏதேனும் தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print