காலையிலும் மாலையிலும் தொடர்ந்து இட்லி, தோசை சாப்பிடுபவர்களா? இந்த பதிவு உங்களுக்கு தான்!

நம்மில் பலரிடம் காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்ற கேள்விக்கு 90% தென்னிந்தியர்களின் பதில் இட்லி அல்லது தோசை என்பதாகத்தான் இருக்கும். இரவு உணவிற்கும் பெரும்பாலான மக்கள் முதலில் இட்லி அல்லது தோசை விரும்பி சாப்பிடுகின்றனர். எளிதாக செரிமானமாக கூடிய மற்றும் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி மற்றும் தோசை உள்ளது.

சில சமயங்களில் மாவை சீக்கிரம் புளிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் பேக்கிங் சோடா மற்றும் ஈனோ போன்ற பொருள்கள் உடலுக்கு மிகவும் கேடாக அமைகிறது. சோடியம் பைகார்பனேட் பேக்கிங் சோடா ரத்தத்தில் உள்ள ph அளவை அதிகரிப்பதோடு சிறுநீரகத்தையும் வெகுவாக பாதிக்கிறது.

இதில் பயன்படுத்தப்படும் இனோ மருந்தில் 60% வரை சோடியம் உள்ளது. இட்லி பஞ்சு போல வரவேண்டும் என்பதற்காக ஹோட்டல்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் சிலர் இதை மாவில் கலக்கின்றனர். ஆனால் இப்படி சேர்ப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு திறன் குறைய வழிவகை செய்கிறது.

மேலும் பல வகையான பாக்டீரியா மற்றும் அலர்ஜி ஏற்படவும் காரணமாக அமையும். பேக்கிங் சோடா கலப்பதால் அஜீரணம் உடல் சோர்வை ஏற்படுவதோடு சர்க்கரை அளவுகளும் உயரக்கூடும். சோடாவில் உள்ள பாஸ்பரைக் அமிலம் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் உள்வாங்குவதை தடுக்கும்.

எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா சோர்வை விரட்ட சில டிப்ஸ்!!

இப்படி தீங்கு விளைவிக்கும் முறைகளை கையாள்வதை விட்டுவிட்டு இயற்கையான முறையில் முன்தினம் அரைத்து வைத்த மாவை பயன்படுத்துவது சிறப்பான ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது சமையல் வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.