கிழக்கு ஈரோடு இடைத்தேர்தல்: குக்கர் விநியோகம் தொடர்பாக இரண்டு வழக்கு பதிவு!

கிழக்கு ஈரோடு இடைத்தேர்தலில் செல்வாக்கு செலுத்த வாக்காளர்களுக்கு பிரஷர் குக்கர் விநியோகித்ததை எதிர்த்து தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி கே.சிவக்குமார் கூறியதாவது: வெட்டுக்காட்டுவலசு, சக்தி குடோன் பகுதிகளில் வாக்காளர்களுக்கு பிரஷர் குக்கர் விநியோகித்ததாக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பிரஷர் குக்கர் விநியோகம் குறித்த புகார்களைத் தொடர்ந்து போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர், தொகுதியின் பல இடங்களில் பரிசுப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் விநியோகம் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடந்துள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர்.

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மக்களிடம் பணம் விநியோகிக்கப்படுவது குறித்து தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, ​பறக்கும் கண்காணிப்பு குழுவினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் அப்பகுதிகளில் ஆய்வு செய்து புகார்கள் மீது விசாரணை நடத்துகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வந்துள்ளதாகவும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அனுமதியின்றி இயங்கிய அரசியல் கட்சிகளின் 14 தேர்தல் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், எட்டு தற்காலிக கூடாரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றியதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மனைவி நடத்தையில் சந்தேகம்; பக்கத்து வீட்டுக்காரரை குடும்பத்துடன் வெட்டிக்கொல்ல முயற்சித்தவருக்கு ஆயுள் தண்டனை!

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருவதாகவும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.