அந்தமானில் நேற்றைய தினம் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவானது. அதிலும் குறிப்பாக ஐந்து முறை ஒரே நாளில் நிலநடுக்கம் பதிவாகி அங்குள்ள வரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.4 ரிட்டர் அளவாக பதிவானது.
அதனை தொடர்ந்து பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை தொடர்ந்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. சுமார் ஐந்து முறை அந்தமானின் நடுக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ஆனது இன்றைய தினமும் பதிவாகியுள்ளதால் அங்குள்ள மக்கள் மீண்டும் பதற்றத்தில் உள்ளனர். அதன்படி அந்தமானின் போர்ட் பிளாரில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது லிட்டர் அளவில் ஐந்தாக பதிவாகியுள்ளது.
நேற்று பிற்பகலில் பலமுறை ஏற்பட்ட நிலையில் இன்றும் போர்ட் பிளாரில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.