விசாகப்பட்டினத்தில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கியதாகவும் இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலநடுக்கம் குறித்த சேதவிவரம் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் பெரிய அளவில் எந்த சேதமும் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றதும் இன்னும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்லாமல் வெளியிலேயே நின்று கொண்டு பூமியை அச்சத்துடன் பார்த்து வருகிறார்கள் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment