ஆவலோடு எதிர்பார்த்த திமுக 9- ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது,
அந்த வகையில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் விஜய் மக்கள் இயக்கமும் போட்டியிடுவதால் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக தொடங்கியது.
இந்த நிலையில் திமுக தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 9-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட நகராட்சிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
