உலகத்தில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி கொண்டு வேகமாக பரவிவருகிறது ஒமைக்ரான். இந்தியாவிலும் ஒமைக்ரான் அதி வேகத்தில் பரவிவருகிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பு இந்திய விமான நிலைய ஆணையம் வெளிநாட்டு பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விதித்திருந்தது.
இந்த நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு முறை கட்டாயம் என்று கூறியுள்ளது. முன்னதாக சர்வதேச விமான பயணிக்கு மட்டுமே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
அதன்படி உள்நாட்டு பயணிகள் அனைவரும் தர்மல் ஸ்கேனர் பரிசோதனை முறை, இ-பதிவு முறை கட்டாயம் என்றும் கேரள பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிகளும், கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்றும் இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது,