30 வயது நபர் ஒருவர் 550 குழந்தைகளுக்கு தந்தை ஆகி உள்ள நிலையில் அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
டச்சு நாட்டை சேர்ந்த 30 வயது வாலிபர் ஜேக்கப். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இவர் விந்தணு தானம் செய்ததாகவும் அதன் மூலம் அவருக்கு 550 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டச்சுநாட்டைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 25 நபர்களுக்கு மட்டுமே விந்தணு தானம் செய்ய முடியும் என்பதும் 25 பெண்களுக்கு மேல் விந்தணு தானம் செய்தால் அது குற்றமாக கருதப்படும் என்றும் சட்டமாக உள்ளது. இந்த நிலையில் ஜேக்கப், டச்சு நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் தனது விந்தணுவை தானம் செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது விந்தணுவை தானமாக செய்துள்ளதாகவும் இதுவரை அவர் 550 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
25 குழந்தைகள் அல்லது 12 தாய்மார்களுக்கு மட்டுமே விந்தணு தானம் செய்ய முடியும் என்ற விதிமுறையை மீறி அவர் அதிகப்படியான நபர்களுக்கு விந்தணு தானம் செய்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் அவர் தனது விந்தணுவை தானம் செய்து அதன் மூலம் ஏகப்பட்ட பணம் சம்பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அவரது குழந்தைகள் டென்மார்க் மற்றும் உக்ரைன் நாடுகளில் தான் அதிகம் இருக்கிறது என்றும் அங்குதான் அவர் அதிகம் விந்தணுவை தானம் செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் அவர் வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி தானம் செய்துள்ளதாகவும் இதனால் தான் அவரது செயலை இத்தனை வருடம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. முதல் முதலாக 2018 ஆம் ஆண்டில் அவர் விந்தணு தானம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார் அதன் பிறகு அவர் படிப்படியாக ஒவ்வொரு விந்தணுவை அளித்துள்ளதாகவும் உலகின் பல நாடுகளில் தற்போது அவர் குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.