தசரா பண்டிகையை: அக்.1 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

நம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் பண்டிகை காலங்களில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல படம் எடுப்பார்கள்.

அந்த வகையில் தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பத்தூரில் இருந்து திருச்செந்தூர், குலசேரப்பட்டினத்திற்கு அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேசி வரையில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

அதே போல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக அக்டோபர் 6ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைப் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.

மேலும், அரசு விரைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் Tnstc official app மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.