மீண்டும் ஓபிஎஸ்ஸை சீண்டும் துரைமுருகன்! எப்போது முடிவுக்கு வருமோ முல்லைப்பெரியாறு அணை?

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை பற்றி பேசியிருந்தார்.

முல்லை பெரியாறு அணை

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளரை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் துரைமுருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முல்லைப் பெரியாறு அணைக்கு வந்ததே இல்லை என்று கூறினார்.

முல்லை பெரியாறு அணை

அதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 14 முறை சென்று வந்ததாகக் குறிப்பிட்டார். இந்த நிலையில் மீண்டும் நீர்வளத்துறை அமைச்சர் கேள்வி கேட்டுள்ளார்.

அதன்படி முல்லைப் பெரியாறு அணைக்கு 14 முறை சென்று வந்த தேதிகளை ஓபிஎஸ் தருவாரா? என்று கேட்டுள்ளார். அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராக 2011 முதல் 2021 வரை அனைத்து சென்று வந்த தேதிகளை குறிப்பிட்டு சொல்ல முடியுமா? என்றும் அமைச்சர் துரைமுருகன் கேள்வி கேட்டுள்ளார்.

ஓபிஎஸ் குறிப்பிட்டுச் சொன்னால் அது குறிப்பேட்டில் பதிவாகி இருப்பதால் சபாஷ் என்று நானே பாராட்டுகிறேன் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார். சுருக்கமாக சொன்னால் ஓபிஎஸ் அணையின் நீரை தொட்டு விட்டு வந்து இருக்கிறாரே, தவிர அணையை கண்டுவிட்டு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment