முல்லைப்பெரியாறு அணையை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் துரைமுருகன்!

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். முல்லைப் பெரியாறு அணை ஆய்வில் அவரோடு அமைச்சர் சக்கரபாணி, பெரியசாமி போன்றோர் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துரைமுருகன்

அதன் பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை கலாய்க்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் விமர்சித்திருந்தார்.

இவ்வாறு இருக்கையில் தற்போது நீர்வளத்துறை அமைச்சர் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த செம்பரபாக்கம் ஏரி 24 மணி நேரமும் பாதுகாப்பு துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்த செம்பரம்பாக்கம் ஏரி சென்னையை அடுத்து காணப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழையால் அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அதிக அளவு நிரம்பி காணப்படுகிறது.சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்து வருகிறார் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன்.

இந்த ஆய்வில் அவரோடு ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களும் பங்கேற்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment