Connect with us

எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பிலிருந்து டம்மி ஆயுதங்கள் பறிமுதல்!: ஹைகோர்ட்டில் மனு

எதற்கும் துணிந்தவன்

பொழுதுபோக்கு

எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பிலிருந்து டம்மி ஆயுதங்கள் பறிமுதல்!: ஹைகோர்ட்டில் மனு

எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பிலிருந்து டம்மி ஆயுதங்கள் பறிமுதல்!: ஹைகோர்ட்டில் மனு

ஒவ்வொரு படத்திலும் உண்மையானது போலவே கொலை போன்ற கொடூர நிகழ்வுகள் காணப்படும். ஆனால் அவை அனைத்தும் போலியானவைகளே அவற்றுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் டம்மி ஆயுதங்களே.

இருந்தாலும் ஒரு சில இடங்களில் படப்பிடிப்புக்கு கொண்டு செல்லப்படும் டம்மி ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இது குறித்து தென்னிந்திய திரைப்பட டம்மி எக்ஸ்போர்ட் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களை இடையூறின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடைமுறை படுத்த கோரி மனுத்தாக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டம்மி ஆயுதங்களை கொண்டு செல்ல நடைமுறைப்படுத்தக் கோரி 2014ஆம் ஆண்டில் அந்த விண்ணப்பம் மீது நடவடிக்கை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்புக்கு துப்பாக்கிகளைக் கொண்டு சென்ற போது போலீசார் பறிமுதல் செய்தது என்று மனுவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் உள்ள கிடங்கில் இருந்தும் 150 டம்மி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top