பெற்றோர்களே உஷார்; நாளை முதல் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!

புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள்து.

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பேரவையில் முதல்வர் ரங்கசாமி மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதனடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் அதிக அளவில் பரவி வரும் வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு நாளை முதல் மார்ச் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே புதிய வைரஸ் காய்ச்சல் அதிகம் இருப்பதாக கூறப்படுவதாலும், 10, 11,12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதால் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.