#Breaking பொதுமக்கள் கவனத்திற்கு… இன்று மின்சார ரயில் சேவை ரத்து!

மாண்டஸ் புயல் காரணமாக சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையிலான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ளதால் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, சென்னையில் புறநகர் ரயில்கள் தேவைப்பட்டால் ரத்து செய்யப்படலாம் அல்லது மாற்றியமைக்கப்படலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.30 வரை கரையைக் கடந்தது. மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடந்த போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 70 முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.

இதனால் நேற்று இரவு மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. புயல் கடக்கும் போது பலத்த காற்று வீசியதால் அங்காங்கே மின் கம்பங்கள், மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளன. அதனை சரி செய்யும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள் அதிகாலை முதலே தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

இதனிடையே சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையம் அருகே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளச்சேரியில் இருந்து கடற்கரை மார்க்கம் செல்லும் மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.