சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள சாலைகளில் வெள்ள நீரில் மூழ்கியது என்பதும் இதனால் போக்குவரத்து தடைபட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இருப்பினும் சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பல பகுதிகளில் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்பதும் சாலை போக்குவரத்து தற்போது எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திநகர் பகுதியில் இன்னும் மழை நீர் வடியாமல் இருப்பதை அந்த பகுதி மக்கள் சுட்டிக் காட்டியதை அடுத்து தற்போது அந்த பகுதியில் மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து போக்குவரத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரம் மழை பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்

சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் தி நகர், பசூல்லா சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலை – வாணி மஹால் சந்திப்பிலிருந்து பசூல்லா நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment