அடுத்த 5 நாட்களுக்கு கனமழையாம்: தீபாவளி பட்டாசு விற்பனை சரிவு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தீபாவளி கன மழையில் தான் கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் கனமழை காரணமாக தீபாவளி கொண்டாட்டம் மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தீபாவளி விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த இலட்சக்கணக்கான பட்டாசுகள் விற்பனை ஆகவில்லை என பட்டாசு விற்பனையாளர்கள் புலம்பி வருகின்றனர்

பட்டாசுகள் வாங்கினாலும் மழை பெய்து கொண்டிருப்பதால் அதை வெடிப்பதற்கு வழி இல்லை என்பதால் பட்டாசு வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு பட்டாசு இல்லாத தீபாவளியாக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment