சென்னை திரும்பும் மக்களுக்கு நற்செய்தி; இன்று உங்களுக்காக சிறப்பு ஏற்பாடு!

பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொதுமக்கள் எளிதில் பயணிக்கும் வண்ணம் இன்று மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னை முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தற்போது பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14 போகிப் பண்டிகை, ஜனவரி 15 பொங்கல் பண்டிகை , 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 18ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று உறுதியாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்றும், நாளை காலையும் சொந்த ஊருக்குச் சென்ற லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்ப வாய்ப்புள்ளது.

சென்னை வந்தடையும் மக்கள், அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.