7 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகிறது கனமழை: வானிலை ஆய்வு மையம்!

இன்னும் 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

ஏற்கனவே தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் கனமழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment