அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை: சென்னையில் மீண்டும் வெள்ளம் வருமா?

அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு இன்னும் ஒரு சில நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அது வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் நகர்ந்து சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை தரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பதும் தற்போது தான் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி நாளை முதல் சனிக்கிழமை வரை மிக அதிக கனமழை இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment