நாமக்கல் முட்டைக்கு கிடுகிடுவென உயரும் மவுசு; இன்னைக்கு ஒரு முட்டை விலை என்ன தெரியுமா?

கிறிஸ்துமஸ், புத்தாண்டு எதிரொலியாக கேக் தயாரிக்க முட்டை தேவை என்பதால் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு காரணமாக கேக் தயாரிக்க முட்டை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் பகுதிகளில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வருவதாகவும், தற்போது குளிர்காலம் என்பதால் முட்டை யின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் முட்டையின் விலை மேலும் உயரக்கூடும் என்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் முட்டை விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.5.40 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,000 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.