கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தென்கிழக்கு வங்க கடலில் புயல் தோன்றியுள்ளதை அடுத்து அந்த புயல் வரும் 9-ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து நாளை (டிசம்பர் 8) முதல் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கனமழையை நாளை (டிசம்பர் 8) ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாளை (டிசம்பர் 8) திருவாரூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இன்னும் பல மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்னும் ஒருசில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.