#BREAKING கொட்டித் தீர்க்கும் கனமழை… பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக – வடஇலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர், திட்டச்சேரி, கிழ்வேளூர், சாட்டிக்குடி, விழுந்தமாவடி, செருதூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
எனவே நாகை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
