கனமழை எதிரொலி: சென்னை உள்பட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதேபோல் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் பள்ளி விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதையடுத்து இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment