7 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை: கலெக்டர்கள் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் 7 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வேறு சில மாவட்டங்களில் இருந்தும் விடுமுறை அறிவிப்பு வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதையடுத்து நேற்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இன்றும் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் , புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் பாதுகாப்பாக அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் கனமழை பெய்து வரும் பகுதிகளில் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment