கனமழை எதிரொலியால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக கன மழை பெய்து வரும் மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது அடுத்து அந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சிஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment