Connect with us

இனி சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு?

பள்ளிகள் திறப்பு

தமிழகம்

இனி சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு?

இனி சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு?

இனி சனிக்கிழமைகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கலாமா? என பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா  தாக்கம் காரணமாக ஆண்டுக்கணக்கில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த பிப்ரவரி முதல் முழுமையாக இயங்க ஆரம்பித்துள்ளன. மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையிலும், பாடங்களை முடிப்பதற்காகவும் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொருபுறம் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் வகுப்புகளை குறைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top