Connect with us

காய்ச்சல் பாதிப்பு தீவிரம்; நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

school closed2

செய்திகள்

காய்ச்சல் பாதிப்பு தீவிரம்; நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக சென்னையில் குழந்தைகளுக்கு பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல் பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. தமிழகத்தைப் போலவே

புதுச்சேரியிலும் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்திருந்தது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. அதிலு பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த காய்ச்சல் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு தீவிரத்தின் எதிரொலியாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

FcyZlkzaUAEEC A?format=jpg&name=large

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top